எமிஸ் இன்னலை உடனடியாக தடுத்த நிறுத்த வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசு வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பள்ளி மாணவியரின் உணவு விவரங்கள், சுகாதார தகவல்கள், பெண் குழந்தைகளின் இயற்கை சார்ந்த விவரங்களை எல்லாம் எமிஸ் (கல்வி மேலாண்மை தகவல் மையம்) மூலம் பதிவு செய்யச் சொல்லுமாறு ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பெண் குழந்தைகள் இயற்கை சார்ந்த விவரங்களை தாயிடமோ அல்லது பெண் மருத்துவரிடமோ சொல்வார்களே தவிர, ஆசிரியர்களிடம் சொல்ல தயங்குவார்கள். இந்த உத்தரவு மாணவியரிடையேயும், ஆசிரியர்களிடையேயும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே தமிழக முதல்வர் இதில் உடனடியாக தலையிட்டு, இந்த விவரங்கள் கேட்கப்படுவதை தவிர்க்கவும், மாணவ, மாணவியருக்கு கல்வி போதிப்பதில் ஆசிரியர்கள் கவனம் செலுத்தும் வகையில் ஆசிரியர்களின் கூடுதல் சுமையை குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.