Elambahavath IAS Appointed As the Special Officer of Illam Thedi Kalvi Thittam – இல்லம் தேடி கல்வி திட்டத்தின் அதிகாரியாக இளம்பகவத் ஐஏஎஸ் நியமனம்
தமிழ்நாடு அரசு அக்டோபர் 30, 2021 அன்று பள்ளி கல்வித்துறை சார்பில் தொடங்கப்பட்ட இல்லம் தேடி கல்வி திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக இளம்பகவத் ஐஏஎஸ் அவர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளது. முன்பாக, அவர் தமிழ்நாடு நகர்புற வாரிய வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் திட்ட இயக்குனராக செயல்பட்டு வந்தார்.
சரி அவருடைய சுயவிவரத்தை சற்று சுருக்கமாக காணலாம்.
Who is the Elambahavath IAS ? – யார் இந்த இளம்பகவத் ஐஏஎஸ்?

இளம்பகவத் ஐஏஎஸ் அவர்கள் சொந்த மாவட்டம் தஞ்சாவூர். ஓரத்தநாடு அருகே உள்ள சோழன்குடிகாடு என்ற குக்கிராமத்தை சேர்ந்தவர். இவரது அப்பா கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றிவர். இவர் பன்னிரென்டாம் வகுப்பு படிக்கும்போது, இவரது தந்தை காலமானாா். தந்தை மறைவுக்கு பின், கருணை அடிப்படையில் அரசு பணி பெறலாம் என காத்திருந்த இவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
தனது விடாமுயற்சியில் மேற்படிப்ப தொடர வேண்டும் என நினைத்து வறுமையிலும் கிடைத்த வேலையை செய்து கொண்டு, சென்னை பல்கலையில் தொலைதூர கல்வி முறையில் பி.ஏ முடித்தார். நிரந்தர பணி கிடைக்காததால், அரசு பணியில் சேர நினைத்த இவர், தொடர்ந்து அவர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் பங்கேற்றார்.
இதன்விளைவாக, 2007 தேர்வில் வெற்றிபெற்று, காவல்துறை அமைச்சு பணியில் இளநிலை உதவியாளராக வேலைவாய்ப்பு கிடைத்தது. ஆனால், இந்த பணியில் அவருக்கு நாட்டமில்லை. பின்னர், அடுத்த ஆறு மாதத்தில் குரூப் 2 தேர்வில் வெற்றிபெற்று, தலைமை செயலகத்தில் உதவியாளராக பணிக்கு சேர்ந்தார்.
மீண்டும் குரூப் 1 தேர்வு எழுதி காவல்துறையில் டிஎஸ்பி பதவி பெற்று, ஹிரியானாவில் பயிற்சி பெற்ற வந்தார். அப்போதுதான், ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற வேட்கை அவரிடம் பிறந்தது. பின்னர் அவர் தேர்வு எழுத தொடங்க ஆரம்பித்தார். பின்னர் 2015ம் ஆண்டு நடைபெற்ற குடிமை பணித்தேர்வில் அகில இந்திய அளவில் 117வது இடம் பிடித்து ஐஏஎஸ் ஆனார்.
இந்த தகவலை மத்தவங்களுக்கு ஷேர் பண்ணுங்க, உங்களுடைய கருத்து என்னவென்று மறக்காமல் கமெண்ட் பாக்ஸில் சொல்லுங்க….
Join WhatsApp Group | WhatsApp Group |
To Follow Telegram : | Telegram Link |
To Follow Facebook | Facebook Link |
To Follow Twitter | Twitter Link |
To Follow Instagram | Instagram Link |
To Follow Youtube | Youtube Link |