Government School Teachers School Time – பள்ளி ஆசிரியர்கள் பணி நேரம்
கரூர் மாவட்டத்தின் தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் செயலாளர் ஆ.மலைக்கொழுந்தன் தகவல் பெறும் உரிமைச்சட்ட மனுவின் கீழ் அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் வருகை நேரம் குறித்து தகவல் பெற்றுள்ளார்.
குறிப்பாக இந்த தகவல் ஆசிரியர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால், ஒரு சில இடங்களில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் தன்னிச்சையாக நேர மேலாண்மை செய்வதில் ஆசிரியர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
Government School Teachers School Time
வினா எண் – 1 தகவல்
தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகள் வேலை நேரம் காலை 9 மணி முதல் மாலை 4.10 முடிய
வினா எண் 2க்கான தகவல்
தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள் காலை 8.45 மணிக்கும் மற்றும் ஆசிரியர்கள் காலை 9 மணிக்கும் வருகை தர வேண்டும்.
Also read this: ஆசிரியர் கலந்தாய்வு: ஆசிரியர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டம்
வினா எண் 3 மற்றும் 4க்காக தகவல்
உயர்நிலை பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் வேலை நேரம் காலை 9.20 மணி முதல் மாலை 4.20 முடிய
வினா எண் 5க்கான தகவல்
உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் காலை 9.15 மணிக்கு வருகை தர வேண்டும்
வினா எண் 6க்கான தகவல்
உயர்நிலை பள்ளி மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் காலை 9 மணிக்கும் உடற்கல்வி ஆசிரியர்கள் காலை 8.45 மணிக்கும் பள்ளிக்கு வர வேண்டும்.
வினா எண் 7க்கான தகவல்
உயர்நிலை பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் கழகம்,ஆசிரியர் குழுவின் தீர்மானம் மற்றும் உயர் அலுவலர்களின் ஒப்புதல் பெற்று வேலை நேரம் உள்ளுர் சூழலுக்கு ஏற்ப மாற்றி கொள்ள முடியும்.

உங்கள் கருத்துகளை கிழே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள்.