CRC Training Cancel | குறுவளமையக் கூட்டம் ஒத்திவைப்பு
CRC Training Cancel
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை இணைந்து பல்வேறு தொடர் ஆசிரியர் பயிற்சிகள் (Teacher Professional Development) 2022-2023 ஆம் கல்வியாண்டில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
Read Also: BEO School Inspection Form PDF Download
இதனை தொடர்ந்து, 1 முதல் 3ஆம் வகுப்பிற்கு எண்ணும் எழுத்தும் சார்ந்தும், 4 மற்றும் 5 ஆம் வகுப்பிற்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் சார்ந்தும் மாநில அளவிலான முதன்மை ஏதுவாளாள் கூட்டம் மற்றும் மாவட்ட அளவிலான ஏதுவாளர்களுக்கான கூட்டம் நடைபெற்ற முடிவடைந்துள்ளது.
குறுவளமைய சிஆர்சி அளவிலான கலந்தாலோசனை கூட்டம் 26.11.2022 அன்று நடைபெறவிருந்தது. அக்கூட்டம் 3.12.2022 அன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது என அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.