அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
35.7 C
Tamil Nadu
Thursday, March 30, 2023

IFHRMS Service Register Work – ல் மீண்டும் பணி பதிவேடு பதிவேற்றும் பணியா? – புதிய உத்தரவு – எதிர்ப்பு

கோவை மாவட்ட ஆட்சியர், அனைத்து பணம் பெறும் அலுவலர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அந்த உத்தரவில், கோவை மாவட்ட அனைத்து பணம் பெறும் அலுவலர்களும், தங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து அரசு பணியாளர்களின் பணிப்பதிவேடுகளையும் (இஎஸ்ஆர்) மின்னனு பணிப்பதிவேடுகளாக பதிவு செய்து ஜூலை 2021 அன்று உள்ளவாறு சரிபார்க்கப்பட்டு சரியானது என்பதை உறுதி செய்து அதன் நகலில் (ESR – PDF) உரிய பணியாளர்களின் கையொப்பம் பெற்றுள்ளதாக, சான்றினை சமர்ப்பித்துள்ளனர்.

17-09-2021 அன்று ஆணையர், கருவூலம் மற்றும் கணக்குத்துறை, சென்னை அவர்களின் காணொளி கலந்தாய்வு கூட்டத்தில் மேற்படி விவரங்களை உரிய அலுவலரிடம் அளித்து சரிபார்த்து உறுதி செய்துள்ளதன் அடிப்படையில் அவரது பணிபதிவேடுகளின் – bio date form, nomination, promotion, and pay fixation, ஆகிய பக்கங்களை scan செய்து ESR Application ல் பதிவேற்றம் செய்த பின்பு, Final ESR Sign Off Sheet னை Generate செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், இதனை வரும் 28ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என தொிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பணம் பெறும் அலுவலர்கள் கூறும்போது, IFHRMS சாப்ட்வேர் வந்த பிறகு, சம்பள பட்டியலை கருவல அலுவலகத்தில் நேரடியாக வந்து சமர்ப்பிக்க வேண்டியதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் இந்த நடைமுறை அமுல்படுத்தவில்லை, இன்னும் கருவூலத்தில் சென்று சம்பள பட்டியல் சமர்பித்து வருகிறோம்.

ஏற்கனவே, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிப்பதிவேட்டினை இந்த சாப்ட்வேரில் பதிவு செய்துள்ளோம். மீண்டும் இந்த பணியை செய்ய உத்தரவிட்டுள்ளனர். இந்த சாப்ட்வேர் வடிவமைத்துள்ள நிறுவனம் செய்ய வேண்டிய வேலையை எங்களுக்கு மாற்றுகின்றனர். இதுதவிர, சர்வர் பிரச்னை அடிக்கடி சந்திக்க வேண்டியுள்ளது. இவ்வாறு, அவர் புலம்பினார்.

உங்கள் கருத்து என்னவென்று மறக்கமால், கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.

Related Articles

Latest Posts