பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:
ஜூன் 1ம் தேதி துவங்க இருந்த ஜூன் 15ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. மேலும் ஜூன் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடக்கிறது. 11ம் வகுப்பு தேர்வு (புவியியல், கணக்கியல், வேதியியல்) ஜூன் 16ம் தேதி நடக்கவுள்ளது.
புதிய பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. ஜூன் 15ல் – மொழிப்பாடம், ஜூன் 17ல் – ஆங்கிலம், ஜூன் 19ல் – கணிதம், ஜூன் 20ல் – விருப்ப மொழி, ஜூன் 22ல் – அறிவியல், ஜூன் 24ல் – சமூக அறிவியல், ஜூன் 25ல் – தொழிற்பாட தேர்வு. ஜூன் 18ம் தேதி மாணவர்களுக்கு பன்னிரென்டாம் வகுப்பு தேர்வு நடக்க உள்ளது,” என்றார்.
“கொரோனா பரவல் குறையாத காரணத்தால், தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் கலந்து ஆலோசித்து பின்னர் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது, இவ்வாறு அவர் கூறினார்.