அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
29.9 C
Tamil Nadu
Friday, December 8, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

சமுதாயத்தில் குழந்தைகளுக்கு இவ்வளவு பிரச்னையா?

கடந்த பதிவில் குழந்தைகள் அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து விரிவாக பார்த்தோம். அதே சமுதாயத்தில் குழந்தைகள் என்னென்ன வகையான பிரச்னைகளை சந்தித்து வருகிறார்கள் என்பது குறித்து பார்ப்போம்.

குழந்தை தொழிலாளர் – Child Labour

14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை தொழிற்சாலைகள், அலுவலகங்கள், கடைகள், வா்த்தக நிறுவனங்களில் பணி அமர்த்த அரசு தடை விதித்துள்ளது. உலக நாடுகள் மத்தியில், இந்தியாவில் அதிக குழந்தை தொழிலாளர்கள் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது. குழந்தைகளை பணியமா்த்தினால், அவர்களின் கல்வி தடைபட்டு, அவர்களது வாழ்க்கை வறுமை நோக்கி நகர்ந்துவிடும் என குழந்தை ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. உங்களுடைய பகுதி அல்லது உங்கள் ஊரில் குழந்தை தொழிலாளர்கள் இருந்தால், அவரது வாழ்கையை மீட்டெடுக்க வகையில் சைல்டுலைன் எண் 1098 தொடர்பு கொண்டு உதவலாம்.

குழந்தையை துன்புறுத்தல் – Abuse and Violence

இயல்பாகவே குழந்தைகளிடம் குறும்புதனம் சற்று அதிகமாகவே இருக்கும். பெற்றோர்களே, குழந்தையை அடித்து துன்புறுத்துவது நாம் நேரடியாக பார்த்து இருப்போம். ஆனால், அதுவே உள்நோக்கத்துடன் குழந்தைகைள பாதிக்கும் விதமாக அவர்களை தாக்குவது, உதைப்பது, குத்துவது, குழந்தையை வீசுவது, கடிப்பது, சூடு வைப்பது, உடல் ரீதியாக துன்புறுத்துவது கடும் குற்ற செயலாகும். குழந்தைகளை துன்புறுத்துவோர் மீது சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியும். அதேபோன்று, குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுக்க மறுப்பது, உணவு வழங்க மறுப்பது குழந்தைகளுக்கு எதிரான செயலாக கருதப்படுகிறது.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை – Sexual Abuse

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை இந்தியாவில் சாபக்கேடாக உள்ளது. பெண் குழந்தைகள் ஆங்காங்கே பாதிக்கப்படுவது தினசரி நாளிதழ் மூலம் அறிகிறோம். இதில் ஒவ்வொருவரும் தனிமனித ஒழுக்கத்தை பின்பற்றுவது இவ்வகையான குற்றத்தை தடுக்க முடியும். குழந்தைகளை பாலியல் வன்முறை நோக்கத்துடன் குழந்தைகளை தழுவுவது, உறுப்புகளை தொடச் சொல்லி கட்டாயப்படுத்துவது, உறவுக்கு அழைப்பது, நிர்வாணமாக்குவது, பாலியல் தொழில் ஈடுபட வைப்பது, கட்டாயப்படுத்துவது, குழந்தைகளை வைத்து ஆபாச படம் எடுப்பது மற்றும் வலைதளங்களில் பரப்பவது கடும் தண்டணைக்குரியது.

இச்சமுதாயத்தில் பெண் குழந்தைகளை கயவர்களிடம் பாதுகாக்க பெற்றோர், ஆசிரியர் சமுதாயம் நிறைய பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்கள் விஷயங்கள் பெற்றோர் மற்றும் குழந்தைகள் மத்தியில் எடுத்து செல்ல வேண்டும். அதேபோன்று, இந்த இழி செயலில் ஈடுபடுவர்கள் சற்று கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

குழந்தை கடத்தல் – Child Trafficking

குழந்தையை பயன்படுத்தி காசு பார்ப்பதே, குழந்தை கடத்தல் எனக்கூறலாம். குறிப்பாக பெண் குழந்தைகளை கடத்துவது, அவர்களை பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்துவதே அவர்களின் பிரதான நோக்கமாக உள்ளது. அதேபோன்று, மருத்துவ உலகில், குழந்தைகளின் உறுப்பை திருடி விற்பதும் ஒரு தொழிலாகவே நடந்து வருகிறது. ஆண் குழந்தையை கடத்தி, பொது இடங்கள், வழிபாட்டு தலங்களில் அமர்த்தி பிச்சை எடுத்து சம்பாதிக்க வைப்பது என பல அட்டூழியங்களும் மறைமுகமாக நடக்கிறது.

குழந்தை காணாமல் போவது – Runaways

குழந்தைகள் அன்பு, அரவணைப்புடன் நடத்த வேண்டும். சில பெற்றோர்கள் அவர்கள் மன ரீதியாக கொடுமைப்படுத்துவது அவரது இளகிய மனம் ஏற்றுகொள்வதில்லை. அதனை நினைத்து, நினைத்து வறுத்தப்பட்டு, ஆறுதல் கூற, அன்பு செலுத்த ஆட்கள் இல்லாதபோது, ஒரு வித மன வறுத்தத்துடன், குடும்பம் மற்றும் பெற்றோரை விட்டு அவர்கள் விலகி செல்கின்றனர். இவர் எங்கு இருக்கிறார்கள், எப்படி இருக்கிறார்கள் என்பதே யாரும் அறிய முடியாதது. பின்னர், அவர்கள் குழந்தை தொழிலாளியாக மாறுகின்றனர்.  

இதேபோன்று குழந்தையை கடத்துவதும் காணாமல் போகுதல் கீழ் உள்ளடங்குகிறது.

அடிமையாகுதல் – Addiction

பொதுவாக பதின்பருவ குழந்தைகளிடம் போதைக்கு அடிமையாகும் பழக்கம் அதிகரித்து வருகிறது. அவர்களது கால சூழ்நிலை அவர்களை போதை பழக்கத்திற்கு அடிமையாக்குகிறது. இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் கூடுதல் கவனம் செலுத்தி, அவர்களை மீட்டெடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால், அவர்கள் உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் அவர்கள் இளம் வயதிலேயே குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு, சிறார் சிறைக்கு செல்கின்றனர். அவர்கள் எதிர்காலமும் பாழகிறது.

கல்வி மறுப்பது – Education related

குடும்ப வறுமையை போக்க, பெற்றோரை குழந்தைகளை வேலைக்கு அனுப்பம் பழக்கும் தற்போதும் உள்ளது. அவர்களுக்கு கல்வி மறுப்பதால், அவர்களின் எதிர்காலம் படிப்பறிவின்மையுடன் கேள்விக்குறியாகிறது. சிந்திக்கும் திறனும் குறைகிறது. சில குழந்தைகள் குடும்ப வறுமையை உணர்ந்து, அவா்களாகவே வேலைக்கு செல்கிறார்கள். இதில் வறுமையில் உள்ள குடும்பங்களை அரசுகள் தனி கவனம் செலுத்தி அவர்களது பொருளதாரத்தை மேம்படுத்த உதவ வேண்டும். குழந்தைகள் விருப்பமின்றி, அவர்களை வேலைக்கு அனுப்பவது சட்டப்படி குற்றமாகும்.

குழந்தை திருமணம் – Child Marriage

இந்தியாவில் பல கிராமங்கள், ஏன் நகரப்பகுதிகளில் கூட குழந்தை திருமணம் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. இது கிராமத்தில் பாரம்பரியம் என பெரியவர்களால் கருதப்படுகிறது. குழந்தை திருமணம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒன்று. குறிப்பாக குழந்தை திருமணத்தால் பெண் குழந்தைகள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்படுவார்கள். குழந்தை திருமண சட்டம் 2006, ஆணின் திருமண வயது 21, பெண்ணின் திருமண வயது 18 திருமணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது பெண்களுக்கான திருமண வயது 18ல் இருந்து 21 ஆக நிர்ணயிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.  

அடுத்த பதிவில் குழந்தைகளுக்கான சட்டம் குறித்து விரிவாக பார்ப்போம். இந்த தகவல் படித்தபின், உங்கள் நண்பர்களுக்கு பகிர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் விழிப்புணர்வுக்காக…

Related Articles

Latest Posts