முன்பு எப்போது இல்லாத வகையில், இப்போது உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் விளையாட்டில் மூழ்கி உள்ளனர். குறிப்பாக Blue whale உள்ளிட்ட விளையாட்டுக்களால் பலர் உயிரை மாய்த்தனர். அதன்பின், பப்ஜி விளையாட்டு சின்னஞ்சிறு முதல் இளைஞர்களை தன் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
அதன்பின், இதில் மதனும் விதிவிலக்கு அல்ல. பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான மதன் தனது மனைவி யோசனையின் பேரில், நேர்த்தியாக யூடூபில் பப்ஜி விளையாட்டு கானொணிகளை பதிவேற்றம் செய்ய தொடங்கினர். வீடியோக்கள் பிரபலமாக, பப்ஜி ஆர்வலர்கள் மதன் யூடூப் சேனலை பின்தொடர ஆரம்பித்தனர்.
அதன்மூலம் வருவாய் கொட்ட ஆரம்பித்தவுடன், இதற்கு இவ்வளவு பணமா என்ற மமதையில், அடுத்தடுத்து யூடூப் சேனலை தொடங்கி வெற்றிக்கொடி நாட்டினர். வீடியோக்களில் அவரின் எதிர்தனமான பேச்சும், ஆபாச பேச்சும் மாணவர்கள், இளைஞர்களை கட்டி இழுத்தது. யூடூப் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. அவரின் வக்கிர பேச்சும் ஆன்லைன் விளையாட்டின் போது தொடர்ந்தது.
இதை தொடர்ந்து, சென்னை வடபழனி சேர்ந்த அபிஷேக் ரவி என்பவர் அவர் மீது சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். இதுதவிர, கிட்டதட்ட 150 பேர் இவர் மீது புகார் அளித்தனர். இதையடுத்து அவர் தலைமறைவானர். பி்ன்னர், போலீசார் நடத்திய விசாரணையில் கோடிக்கணக்கில் சொத்து வாங்கி குவித்தது தெரிந்தது. மேலுடம் அவரிடம் சொகுசு கார்களை பறிமுதல் செய்தனர். மேலும் தனிப்படை போலீசார், தர்மபுரியில் பதுங்கியிருந்த மதனை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

இந்த நிலையில், போலீசார் 776k subscribe கொண்ட MADAN என்ற சேனலை சற்றுமுன் முடக்கியுள்ளனர். இதையடுத்து, அவர் வீடியோ பதிவாக பதிவேற்றம் காகொணிகள் அனைத்தும் நீக்கப்பட்டன. இதனை அவரை பின்தொடர்பவர்கள் குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Join WhatsApp Group | WhatsApp Group |
To Follow Telegram : | Telegram Link |
To Follow Facebook | Facebook Link |
To Follow Twitter | Twitter Link |
To Follow Instagram | Instagram Link |
To Follow Youtube | Youtube Link |