You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

Certified Copy of Marks in Tamil | மதிப்பெண் சான்றிதழ்களின் சான்றிட்ட நகல் பெறுவது எப்படி

Certified Copy of Marks in Tamil

Certified Copy of Marks in Tamil | மதிப்பெண் சான்றிதழ்களின் சான்றிட்ட நகல் பெறுவது எப்படி

Certified Copy of Marks | மதிப்பெண் சான்றிதழ்களின் சான்றிட்ட நகல்

அரசு தேர்வுகள் இயக்ககத்தால் வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்களை தவறவிடும் தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்களின் சான்றிட்ட மதிப்பெண் நகல் (CCM) வழங்கப்படுகிறது.

மதிப்பெண் சான்றிதழ்களின் சான்றிட்ட நகல் பெற தகுதிகள்

அரசு தேர்வுகள் இயக்ககத்தால் வழங்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்களை மீள திரும்ப பெற வாய்ப்பு இல்லாத நிலையில் தவறவிட்ட மாணவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் ஆவர்.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும் ?

மதிப்பெண் சான்றிட்ட மதிப்பெண் நகல் விண்ணப்பங்களை அரசு தோ்வுகள் இயக்ககம் மற்றும் அதன் மண்டல அலுவலகங்களில் கட்டணமின்றி பெற்றுக்கொள்ளலாம். மேலும் நமது இணையதளத்தில் அதன் விண்ணப்பம் வகுப்பு வாரியாக (10, 12 மற்றும் தொடக்க கல்வி பட்டய தேர்வு) கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேவைப்படுவர்கள் பதவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

Also Read: TN 12th Tatkal Fee Details In Tamil

மேல்நிலை மற்றும் பத்தாம் வகுப்பு தேர்விற்கான மதிப்பெண் சான்றிதழ்களின் சான்றிட்ட மதிப்பெண் நகல் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, பள்ளி தேர்வர்கள் தலைமை ஆசிரியரிடமும், தனித்தேர்வர்கள் அவரவா் கடைசியாக பயின்ற அல்லது அருகில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியரிடம் அத்தாட்சி சான்றிதழ் பெற்று அதற்கான கட்டண தொகையினை செலுத்தி, அசல் செலுத்து சீட்டினை விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இதில் தொடக்க பட்டய தேர்வர்கள் விண்ணப்பத்தில் உள்ள விவரங்களை பூர்த்தி செய்து மதிப்பெண் சான்றிதழ் நகலினை இணைத்து கட்டண தொகையை செலுத்தி, அசல் செலுத்து சீட்டினை சம்மந்தப்பட்ட மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம் எவ்வளவு?

  • முதல் முறை விண்ணப்பித்து பெறுவதற்கு - ரூ. 305
  • இரண்டாவது முறை விண்ணப்பித்து பெறுவதற்கு - ரூ. 405
மேற்காண் சான்றிதழுக்கும் மேற்காண் செலுத்து சீட்டுன் மூலம் கருவூல வங்கி கிளைகளில் செலுத்தப்பட வேண்டும்.

அணுக வேண்டிய அலுவலர்கள் யார் ?

  • பத்தாம் வகுப்பு - தொடக்க கல்வி பட்டயத் தேர்வர்கள் - கல்வித்துறை இணை இயக்குனர் (பணியாளர்) அவர்களை அணுக வேண்டும்.
  • ஆங்கிலோ இந்தியன், மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் படித்தவர்கள் - கூடுதல் செயலாளர் (மெட்ரிக்) அவர்களை சந்திக்க வேண்டும்.
  • மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் (பன்னிரென்டாம் வகுப்பு) - இணை இயக்குனர் (மேல்நிலை) அவர்களை அணுக வேண்டும்.

விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்ய