சென்னை அக்டோபர் – 16,
பள்ளி கல்வித்துறை நடத்தும் ஆசிரியர் பயிற்றுநர் கலந்தாய்வு வெளியிடப்பட்ட முன்னுரிமை பட்டியலில் பாகுபாடு காட்டுவதாக ஆசிரியர் பயிற்றுநர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, ஒருவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டவை,
380 ஆசிரியர் பயிற்றுநர்களுக்காக, 3700 பணியிடங்களை காலிப்பணியிடங்கள் காண்பித்து கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.
Zero vacancy என்ற கலந்தாய்வு அனைத்து பணியிடங்களையும் காலி பணியிடமாக கருதி கலந்தாய்வு நடத்தப்படுகிறது. கலந்தாய்வில் பல்வேறு குளறுபடிகள் பட்டியல் தயாரிப்பதில் நிலவி வருகிறது. இவ்வாறான சூழ்நிலை இருக்கும் பொழுது குளறுபடிகளுடன் பட்டியல்,
முன்னுரிமை என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில்,
1. கணவன் / மனைவி விபத்து அல்லது நோய்வாய்ப்பட்டு இறந்து இருந்தாலோ முன்னுரிமை…
2.date of joining பின்பு இருந்தாலும் rank ஐ வைத்து , 3 மாதம் கழித்து பணியில் சேர்ந்து இருந்தாலும், rank படி சீனியர்ஆக fix செய்யப்பட்டு முன்னுரிமை,
3. பணிநிரவலில் வெளிமாவட்டங்களுக்கு சென்றவர் என்ற பட்டியலில் முன்னுரிமை.
4.திருமணமாகாத முதிர் கன்னியர் என்ற முன்னுரிமை,
5. கணவன் மனைவி இருவரும் பணிபுரியும் முன்னுரிமை,
6. இருதய சிகிச்சை, சிறுநீரக சிகிச்சை, புற்றுநோய் பாதித்தவர், போன்றோர் முன்னுரிமை.
7. ஊனமுற்ற குழந்தைகளை வைத்து இருந்தால் முன்னுரிமை….
இதுபோன்ற முன்னுரிமைகள் அனைத்தையும் கொடுத்து விட்டு, முன்னுரிமை ஏதுமின்றி என்ற பட்டியலில் உள்ள ஆசிரிய பயிற்றுநர்களின் நிலை என்ன? என்ற கேள்வி எங்கள் மத்தியில் எழுகிறது.
மேலும் Zero vacancy என்ற கலந்தாய்வு நடத்த பொழுது இதில் priorityஎன்ற ஒன்றை கடைபிடித்து கலந்தாய்வு நடத்தியாக வேண்டும் என்ற பிடிவாதத்துடன் துறை செயல்பட்டு வருகிறது.
உதாரணமாக, 15.7. 2006ல் பணியில் சேர்ந்த ஒருவர், 2006 சீனியார்ட்டி பட்டியலில் இடம்பெறுவர். இதுபோன்று, priority வழங்கப்படும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு, அவர்கள் பணியில் சேர்ந்த ஆண்டினை (2006) கருத்தில் கொண்டு, முன்னுரிமை வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு வழங்கப்படவில்லை. இதனால், பணி மூப்பு உள்ள ஒருவர், பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார்.
ஆண்டு ஊதிய உயர்வு, பதவி உயர்வு வழங்கப்படும்போது, ஒருவர் பணியில் சேர்ந்த நாள், மாதம் மற்றும் ஆண்டு ஆகியவற்றின் தகுதியை கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆனால், ஆசிரியர் பயிற்றுநர் கலந்தாய்வில் இவைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், அவசர கதியாக நடத்தப்படுகிறது. இதனால், அவர்களின் குடும்ப சூழ்நிலை, குழந்தைகளை எதிர்காலத்தில் தடுமாற்றம் ஏற்படும்.
ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு Priority கொடுக்கும் பொழுது அவர்கள் பணியில் சேர்ந்த தேதி மற்றும் ஆண்டினை கணக்கீடு செய்து, அதன் அடிப்படையில் priority வழஙக்கப்பட வேண்டும். ஆனால் மேற்கண்ட நடைமுறையை பின்பற்றாமல், ஒட்டுமொத்தமாக Priority என்பது மிகவும் வருந்தத்தக்க ஒன்றாகும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் அவர் கூறும்போது, பள்ளி கல்வி ஆணையர் நந்தகுமார் மற்றும் இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி) நரேஷ் இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மறக்காமல் உங்கள் கருத்து என்னவென்று கமெண்ட் செய்யுங்கள்.
Comments are closed.