Bharathiar University semester exam result |பாரதியார் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு
Bharathiar University semester exam result
கோவை பாரதியார் பல்கலைக்கழகம் அதன் கீழ் உள்ள கல்லூரிகளுக்கான இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகளை சற்று முன் வெளியிட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் 2021, இளங்கலை மற்றும் முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் இணையவழியாக நடத்தப்பட்டது. பின்னர், விடைத்தாள்கள் ஆன்லைன் மூலம் மதிப்பீடு செய்யப்பட்டது.
உங்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்க http://results.b-u.ac.in/2021/aff_coll_j2021_except2020/index.html
இதில் உங்கள் ரிஜிஸ்டர் எண்ணை பதிவு செய்து உங்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
Also Read: TNAU UG DIPLOMA ADMISSION 2022 Details
நீங்கள் சரியான முறையில் தேர்வு எழுதியிருந்தாலும், உங்களுக்கு Absent or Hastag என்று தேர்வு முடிவில் வந்திருந்தால், உடனடியாக உங்கள் துறை தலைவருக்கு தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுபோன்று தேர்வு முடிவில் வர காரணம், உங்கள் விடைத்தாள்கள் சரியான முறையில் பதிவேற்றம் செய்யப்படாமல் இருக்க வாய்ப்பு உள்ளது. இருந்தாலும், இந்த பிரச்னையை சாி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை இந்த பாடங்களில் தோல்வி அடைந்திருந்தால், அடுத்த தேர்வுகள் நவம்பர் மாதம் நடக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரியர் மாணவர்களும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். ஏதாவது சந்தேகம் இருந்தால், அந்தந்த கல்லூாிகளில் கேட்டுக்கொள்ளலாம்.