பள்ளிகள் நாளை திறக்கும் நிலையில, தமிழக அரசு 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 40 சதவீதம் பாடத்திட்டம் குறைத்து நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றிபெற்ற மாடுபிடி வீரர்களுக்கு பரிசாக போலியாக தங்க காசு வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பள்ளி திறப்பையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் தூய்மை பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கரூர் காந்தி கிராமத்தில் பூட்டி கிடக்கும் நூலகத்தை திறக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் பள்ளிகளில் தூய்மை பணிப்படுத்தும் தீவிரமாக நடந்து வருகிறது, மாவட்ட கலெக்டர் பள்ளிகளில் ஆய்வு செய்தார்.
பெரம்பலூர் ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் இலவச தொழில் பயிற்சி சேர்ந்து பயிற்சி பெற வரும் 25ம் தேதி முதல் நேர்காணல் நடக்கிறது என பயிற்சி மைய இயக்குனர் அகல்யா தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் நாளை 663 உயர் நிலை, மேல்நிலை பள்ளிகள் திறப்பு, 100 சதவீதம் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் உஷா தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, 18 வயதிற்கு மேற்பட்ட மாற்றுதிறனாளி மாணவ, மாணவிகள், வேலையில்லா பட்டதாரிகள், தனியார் நிறுவனங்கள் பணிபுரியும் மற்றும் சுயதொழில் புரியும் மாற்றுதிறனாளிகள் ஸ்மார்ட் போன் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார். இத்திட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை 539 உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் நாளை திறக்கப்படும் நிலையில், முதன்மை கல்வி அலுவலர் ச. அருள்செல்வம் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சத்து மாத்திரைகளை நேற்று வழங்கினார். பள்ளிகளில் தூய்மை பணி தீவிரமாக நடந்து வருவதாக அவர் தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இன்று முதல் ஆய்வு செய்யப்படும் என மாவட்ட கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.