மதிமுக பொதுச்செயலாளர் வெளியிட்ட செய்தி குறிப்பில், வரும் ஜூலை 1ம் தேதி முதல் பிஎச்டி ஆய்வு படிப்பு முடித்தவர்கள் மட்டுமே கல்லூரி மற்றும் பல்கலை உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தகுதியை பெறுவார்கள் என்று தமிழக அரசின் உயர் கல்வித்துறை அரசாணை பிறப்பித்தது இருக்கிறது. இது அநீதியான அரசாணை, ஏழை மாணவர்கள், பழங்குடியின மாணவர்களின் உயர் கல்வித்துறையில் பணி வாய்ப்பு பறிக்கும் செயல் என குறிப்பிட்டுள்ளார்.
கோவையில் நடந்த பிரசாரத்தில் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேலைவாயப்பு குறித்து பேசும்போது, கோவை மாநகரம் கடந்த 2011ம் ஆண்டுக்கு பிறகு தொழில்துறையில் வளர்ச்சியை கண்டுள்ளது. தொழில் முதலீட்டு மாநாட்டை நடத்தி 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ரூ.60 ஆயிரம் கோடி முதலீட்டில், 74 தொழில்கள் ஈர்க்கப்பட்டுள்ளது என அவர் பேசினார்.
புதிய தொழிற்பள்ளிகள் துவங்குவதற்கு இணையதளத்தில் ஏப்ரல் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் குள்ளாண்டர்கோவில் பகுதியில் அரசு கல்லூரி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விளாத்திகுளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரியநாயகிபுரத்தில், 10 வயதுக்கு கீழ் உள்ள பெண் குழந்தைகள் பயன்பெறும் வகையில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு துவங்கும் விழா நடந்தது.
கலசபாக்கம் துரிஞ்சாபுரம் ஒன்றியம் மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று ஓருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் சமூக நலத்துறை சார்பில் பெண் குழந்தைகள் வார விழா நடந்தது.
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, கல்லூரி மாணவரகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.