ஆசிரியர் பொய் புகார், டெட் விவகாரம், பகுதிநேர ஆசிரியர்கள், இல்லம் தேடி தன்னார்வலர்கள் குறித்து கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
சேலத்தில் கல்வி அமைச்சர் நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள் கொண்ட மண்டல அளவிலான கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
READ ALSO THIS| நம் பள்ளி நம் பெருமை அழைப்பிதழ்| மறாவாதீர் மார்ச் 20, ஞாயிறு காலை 10 மணி
இதில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் என்னென்ன தேவை என்ற விவரங்களை தெரிந்து கெரண்டு, வரும் பட்ஜெட் தொடரில் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்து, 5 ஆண்டுகளில் படிப்படியாக அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
மாநிலம் முழுவதும் ஆசிரியர் காலி பணியிடங்கள் பணி நிரவல் மூலம் காலி பணியிடங்களை நிரப்புவது போன்ற பணிகள் அடுத்த ஒரு மாதத்தில் மேற்கொள்ளப்படும். முழுமையான ஆய்வுக்கு பின்னர் எவ்வளவு ஆசிரியர்கள் தேவைப்படுவார்கள் என்பது தெரியவரும். தமிழகத்தில் கடந்த 2013ல் இருந்து ஆசிரியர் தகுதி தேர்வான டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 80 ஆயிரம் ஆசிரியர்கள் உள்ளனர். கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, ஆண்டுக்கு இரண்டு முறை டெட் தேர்வு நடத்த வேண்டியுள்ளது. ஆசிரியர்களை புதிதாக நியமிப்பது குறித்து பல்வேறு கேள்விகள் இருக்கிறது. அதை எப்படி சரி செய்வது என்பது தொடர்பாக பட்ஜெட் கூட்ட தொடருக்கு பிறகு முதல்வருடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆசிரியர்களால் மாணவிகள் பாலியல் தொல்லைக்குள்ளாவதை தடுக்கும் வகையில் மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதே போன்று, ஆசிரியர்களுக்கும் நிர்வாக பணியாளர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. சில இடங்களில் காழ்புணர்ச்சி காரணமாக ஆசிரியர்கள் மீது பொய் புகாரும் செய்யப்படுகிறது.
இல்லம் தேடி கல்வி திட்டம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தன்னார்வலர்களாக 1.78 லட்சம் பேர் தான் தேவை, ஆனால் 6.6 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் 35 லட்சம் மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர். பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்று தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தோம். அதனை முதல்வா் படிப்படியாக நிறைவேற்றுவார். 11ம் வகுப்பு மாணவர்களுக்கு 12ம் வகுப்பு பாடங்கள் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பபோம். இவ்வாறு அவர் கூறினார்.