காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழக துைணவேந்தர் பதவியிடத்துக்கு சுமார் 162 பேர் விண்ணப்பம் செய்துள்ளது, அதிக விண்ணப்பங்கள் பெற்று பல்கலைக்கழக மாறியுள்ளது. இது கல்வியாளர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த ராஜேந்திரன் பதவிக்காலம் கடந்த மாதம் 4ம் தேதியுடன் நிறைவடைந்தது. பின்னர் பல்கலைக்கழக நிர்வாக பணிகளை மேற்கொள்ள வசதியாக உயர்கல்வித்துறை செயலாளர் தலைமையில் துணைவேந்தர் பொறுப்பு குழு அமைக்கப்பட்டது. பின்னர், துணைவேந்தர் தேடுதல் குழுவும் அமைக்கப்பட்டது.
இந்த பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்க கடந்த 2ம் தேதி கடைசிநாளாக அறிவிக்கப்பட்டது. தற்போது இப்பதவிக்கு 162 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
எந்த பல்கலைக்கழகத்தில் இல்லாத வகையில் அதிகளவில் 162 பேர் விண்ணப்பம் செய்தது கல்வியாளர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
கல்வியாளர் கூறும்போது, எப்போது 100க்கும் குறைவானர்களே இந்த பதவியிடத்துக்கு விண்ணப்பம் செய்துள்ளனர். அதிகபட்சமாக பெரியார் பல்கலைக்கழகத்திற்கு 106 பேர் விண்ணப்பித்துள்ளனர். தற்போது 162 விண்ணப்பம் என்பது மிகப்பெரிய வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
காரைக்குடி. தேவக்கோட்ைட, சிவகங்கை பகுதிகளை சேர்ந்த 17 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். தற்போது துணைவேந்தராக இருந்து ஓய்வு பெற்றவர் மீண்டும் விண்ணப்பம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், முன்னாள் துணைவேந்தர்கள், முன்னாள் பதிவாளர்களும் விண்ணப்பம் செய்துள்ளனர்.
Join WhatsApp Group | WhatsApp Group |
To Follow Telegram : | Telegram Link |
To Follow Facebook | Facebook Link |
To Follow Twitter | Twitter Link |
To Follow Instagram | Instagram Link |
To Follow Youtube | Youtube Link |