அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
29 C
Tamil Nadu
Saturday, September 23, 2023

பள்ளிகளை மேம்படுத்த தமிழக அரசுக்கு பிரபல நடிகர் புதிய யோசனை

நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில்,

பெருந்துதொற்று காலம் உருவாக்கிய பொருளாதார நெருக்கடி, மருத்துவ படிப்புகளில் 7.5 சதவீத இடஒதுக்கீடு, தமிழ்வழி கல்வி பயின்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு, பாடப்புத்தகம் முதல் சீருடை வரை அனைத்தும் இலவசம் உள்ளிட்ட பல காரணங்களால் அரசு பள்ளிகளில் மாணவர் சோ்க்கை அதிகரித்துள்ளது.

அதற்கேற்ப, 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கையில், 15 சதவிகிதம் வரை இடங்கள் அதிகரிக்கப்பட்டது வரவேற்புக்குரியது. இன்று மக்கள் அரசு பள்ளிகளை நோக்கி ஆர்வமுடன் வருகிறார்கள். இதற்கேற்ப பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள், மாணவர்கள் ஆங்கிலத்தை தன்னம்பிக்கையோடு பேசவும், எழுதவும் தேவையான பயிற்சிகள் ஆன்லைன் வகுப்புகளை தங்கு தடையின்றி நடத்துவதற்கான தொழில்நுட்ப வசதிகள் ஆகியவை அளிக்கப்பட வேண்டும்.

தரமான, நூலகங்கள், ஆய்வகங்கள் காற்றோட்டமான வகுப்பறை, சுகாதாரமான குடிநீர், சுத்தமான கழிப்பறை, ஆரோக்கியமான மதிய உணவு, நவீன விளையாட்டு உபகரணங்கள் என நம் அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளை விட பன்மடங்கு மேம்பட்டதாக மாற்ற முடியும். தமிழக அரசுக்கு இதைச் செய்யும் ஆற்றலும் உண்டு. இதை சாத்தியமாக்க வேண்டும்,

இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Articles

Latest Posts